22/06/2012

வலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...?

- ஹீலர்.R.கார்த்திகேயன்.,M.Acu.

மேல் உள்ள கேள்விகளுக்கு, வலி நல்லது... என்ற பதிலை சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் [இத சொல்லவா கூப்பிட்ட என்று மனசுக்குள்ள திட்டாதிங்க], ஆம். ஆனால் இது உண்மை இதற்கான விளக்கத்தை கட்டுரையின் இடையில் பார்போம்.


இன்று அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் பல நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் வலி சம்பந்தப்பட்ட அறிகுறிகளை கொண்டுள்ளனர், எடுத்துகாட்டாக : தலைவலி, இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி, கழுத்துவலி, தசை இறுக்கம், ..... என்று பல வலிகளை கூறலாம். இவர்கள் அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் முன்னர் ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை எடுத்தவர்களே பெரும்பாலனவர்கள்.

முதலில் வலி என்றால் என்ன என்பதனை அறியும் முன்னர் இதற்கு ஆங்கில மருத்துவம் சொல்லும் காரணங்களும் அவை தரும் சிகிச்சையும் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

வலி ஏற்படுவதற்கு காரணம், எங்கு வலி வருகிறதோ அந்த இடம்தான் காரணம் தலைவலிக்கு தலையும், கழுத்துவலிக்கு கழுத்தும், மூட்டுவலிக்கு மூட்டுக்களும் காரணம். இப்படிதான் ஆங்கில மருத்துவம் கூறுகிறது. இந்த அடிபடையில் தான் சிகிச்சையும் செய்து வருகிறது. எனவே தான் சாதாரண தலை வலிக்கு கூட தலையை ஸ்கேன் செய்து பார்த்து விட்டு இது சாதாரண தலைவலி அல்ல இதற்கு பெயர் “Migraine Headache” என்று கூறுகிறது. ஏன் என்றால் அதற்கு காரணமும் தெரியாது, குணப்படுத்த மருந்துகளும் கிடையாது. எனவே புதிய பெயர் வைத்து இதனை குணப்படுத்த முடியாது என்று கூறி அனைவரையும் நம்பவைத்து விட்டால் எந்த பிரச்சனை இல்லை, இதனை யாரும் கேள்வி கேட்கப்போவதும் இல்லை என்றுதான் இன்று பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் புதிய புதிய பெயர் வைக்கிறது.

ஆங்கில மருத்துவத்தால் எந்த ஒரு நோயையும் குணப்படுத்த முடியாது மேலும் குணப்படுத்தி விடுவோம் என்று கூறுவது சட்டப்படி குற்றம் என்பது பற்றிய விளக்கத்தை இங்கு பார்க்கவும் : http://www.rkacu.blogspot.in/2012/04/51.html

நமக்கே நன்றாக தெரியும், அதிகம் வெய்யிலில் போவதால், அதிகம் பசிக்கும் போது சாப்பிடாமல் இருப்பது அல்லது அளவுக்கு அதிகம் சாப்பிடுவது, ஒன்று இரண்டு நாட்கள் மலம் கழிக்காத போது இப்படி பல சூழல்களில் தலைவலி எற்படுகிறது. ஆனால் தலைவலிக்கு தலை மட்டுமே காரணம் என்று நினைத்து அதனை மட்டுமே சுற்றி சுற்றி வருவது எந்த காலத்திலும் நோயை குணப்படுத்த உதவாது.

இதே போல மூட்டு வலி. இன்று பலர் இந்த நோயால் அவதிப்படுவதை நாம் கண்கூட பார்கிறோம், இதற்கு ஆங்கில மருத்துவம் ஆரம்ப காலங்களில் வலி மாத்திரையை கொடுக்கிறது [வலி மாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றி பின்பு பார்க்கலாம்..]. சில நாட்கள் குணம் அடைந்தது போல தெரிந்தாலும் பின்பு மீண்டும் நோய் தீவிரம் அதிகரிக்கிறது. இப்போது X-Ray, Scan மற்றும் அனைத்து டெஸ்ட்டும் செய்து பார்த்துவிட்டு [ஏன் இந்த டெஸ்ட்கள் செய்வதற்கு முன்பு தெரியாதா நம்மால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது என்று – என்ன செய்ய பல லட்சம் செலவு செஞ்சு வாங்கியத என்ன பண்ண], உங்க மூட்டு தேய்ந்து விட்டது இனி அதை சரி செய்ய முடியாது என்று கூறி, இதற்கு ஒரே தீர்வு “மூட்டு மாற்று அறுவை சிகிச்சை” என்று இருந்த மூட்டையும் மாற்றி விடுவது எப்படி ஒரு சிறந்த சிகிச்சை ஆகும் என்றுதான் புரியவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் பலருக்கும் மூட்டு மாற்றிய பின்னும் வலி தொடர்வதும், படி ஏறக் கூடாது, காலை மடித்து உட்காரக்கூடாது என்று கூறுவதும் வேதனைக்கு உரியது.

சரி இப்போது மருந்துகளின் கொடூரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...


ஒரு நோயை [வலியை] சரி செய்ய இரண்டு முறைகள் உள்ளது. ஒன்று அந்த நோய் ஏன் ஏற்படுகிறது, அதற்கு காரணம் என்ன, என்பது பற்றிய தெளிவு இருந்தால் அந்த காரணத்தை [நோய் என்பது ஒன்றே ஒன்றுதான் அதுதான் இந்த மூலகாரணம்] சரி செய்வதன் மூலம் நோய் அறிகுறிகளான வலிகள் மற்றும் பல அறிகுறிகளை சரி செய்து விடலாம் [இந்த அறிகுறிகளைத்தான் ஆங்கில மருத்துவம் நோய் என்று நினைக்கிறது]. ஆனால் எந்த ஒரு மருத்துவ இயந்திரமும் நோயின் மூலகாரணத்தை கண்டறிய முடியாது [என்றாவது மனிதனின் அடிப்படை தேவைகளான/உணர்வுகளான பசி-தாகம்-தூக்கம்-சோர்வு-வலிகள் இவற்றை அளவிட மருத்துவ உபகரணங்கள் உள்ளதாக நாம் கேள்விப்பட்டு இருக்கிறோமா..?]. எனவே ஆங்கில மருத்துவம் இரண்டாவது முறையை கையில் எடுக்கிறது, நோயாளிகளின் உடலை/உயிரை பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல்..!

அது தான் வலி மாத்திரைகள். வலி மாத்திரைகள் அவ்வளவு கொடுமையானதா என்றால், நிச்சயம் ஆம் என்றுதான் கூற வேண்டும். ஏன் என்றால் நாம் சாப்பிடும் மாத்திரைகள் எப்படி வலியை சரி செய்கிறது என்பதே இதற்கு பதில்...!


நம் தலையில் Pituitary Gland என்ற சுரப்பிக்கு அருகில் Hypothalamus என்ற ஒரு பகுதி உள்ளது. இது நம் உடலில் ஏற்படும் உணர்வுகளில் ஒன்றான வலிகளை மூளைக்கு தெரிவிக்கிறது. எனவே மருந்துகளை கொடுத்து இந்த Hypothalamus இன் செயல்பாட்டை நிறுத்தி வைத்தால் வலிகள் மூளைக்கு எட்டுவது நிறுத்தப்படும் [என்ன ஒரு வில்லத்தனம்]. ஆகமொத்தம் வலி உடலில் இருக்கும், வலிக்கான காரணிகளும் உடலிலேயே இருக்கும் ஆனால் வலியை மட்டும் உணராமல் வைக்கபடுகிறது.

அப்படி என்றால் உடல் எவ்வளவு நேரம் வலி இல்லாத இந்த நிலையிலேயே இருக்கும்..?

நம் உடல் ஒரு அற்புதமான கட்டமைப்புடன் செயல்படுகிறது, எனவே அது நல்ல நிலையில் உள்ள போது எந்த ஒருரசாயணங்களுக்கும் கட்டுப்படுவது இல்லை. எனவே தான் தினம் தினம் மாத்திரைகள் எடுக்கும் தேவை அதிகரிக்கப்படுகிறது. தொடர்ந்து மாத்திரைகள் எடுக்கும் போது உடலின் இந்த கட்டமைப்பு சின்னாபின்னம் செய்யப்படுகிறது. இப்போது பலருக்கு உடலில் ஏற்படும் பல உணர்வுகள் குறைபடுகிறது, காலில் ஒரு முள் குத்தினாலோ அல்லது ஒரு கல் பட்டு காயம் ஏற்பட்டாலோ கூட தெரிவது இல்லை. இரத்தம் வெளியேறிய பின்பு யாராவது சுட்டிக்காட்டினால் மட்டுமே அவர்கள் சுதாரிப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம்.

இது மட்டும் அல்ல, தொடர்ச்சியாக மருந்துகள் எடுப்பவர்களுக்கு சில நாட்களுக்கு பின்னர் அதிக கோபம், பயம், கண் எரிச்சல், தெளிவற்ற சிந்தனை, ஆண்மை குறைவு, கர்ப்பப்பை பிரச்சனைகள், தூக்கமின்மை, பசியின்மை, இடுப்புவலி, புதிய இடங்களில் வலிகள் என்று பல புதிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் நம் உடலில் உள்ள பிரதான உறுப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறைய தொடங்குவதே ஆகும். காரணம் உடல் ஒருபோதும் ரசாயனங்களை நோய் தீர்க்கும் சக்திகளாக எற்றுகொள்வது இல்லை. இதற்கு ஒரு உதாரணம் அக்குபங்சர் சிகிச்சை மேற்கொள்ளும் பல நோயாளிகள் அவர்களின் உடல் கழிவுகள் வெளியேறும் போது சிறுநீர் மஞ்சள் நிறமுடனோ அல்லது மருந்துகளின் நாற்றமுடனோ வெளியேறுவதாக கூறும்போது நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. அது.., உடல் நோயெதிர்ப்பு சக்தி பெறும்போது மருந்துகளை சக்திகளாக நினைத்து இருந்தால் அவற்றை ஜீரணித்து தன் தேவைக்கு உபயோகம் செய்திருக்கும். ஆனால் நடந்ததோ நேர் மாறானது, உடல் சக்தி பெறும்போது தனக்குள் தேங்கிய ரசாயண மருந்துகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவது, உடல் ரசாயண மருந்துகளை புறக்கணிக்கிறது என்பதை ஆதாரமாக காட்டுகிறது. உடல் என்றுமே கழிவுகளை மட்டுமே வெளியேற்றும் சக்திகளை அல்ல.

சரி இப்போது மீண்டும் மேல் உள்ள கேள்விகளுக்கே வருவோம்...

வலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...?

முதலில் ஏன் வலிகள் ஏற்பட வேண்டும் என்று நாம் யோசிக்க வேண்டும், உடலில் கழிவுகள் தேக்கம் அடையும்போதும், உடலில் உள்ள சக்தியோட்ட பாதைகளில் தடைஎற்பட்டு உடலின் சமநிலை [பஞ்சபூத உறுப்புகளின் இயக்கம்] மாறுபடும்போதும் உடல் அதனை பல அறிகுறிகளாக வெளிப்படுத்தும் அவற்றில் ஒன்றுதான் வலிகள். அதுவும் நமக்கு பிற்க்காலத்தில் ஏற்படும் பெரிய நோயை தடுக்கும் ஒரு முன் அறிவிப்பே..! முனறிவிப்பு எப்படி நோயாகும். எனவேதான் அதனை, வலி நல்லது... என்று மேலே குறிபிட்டுள்ளேன்.

அப்படியென்றால், மேலே உள்ள அனைத்து வியாதிகளையும் நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா..? 

ஆம், நோய் காரணம் தெரிந்தால் நிச்சயம் முடியும். குணப்படுத்த முடியாத வியாதி என்று கூறுவது ஆங்கில மருத்துவத்திற்கு மட்டுமே பொருந்தும், அக்குபங்சர் உட்பட மற்ற எந்த ஒரு மாற்று மருத்துவங்களுக்கும் பொருந்தாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தலைவலிக்கு அடிப்படை கல்லிரலின் இயக்க குறைபாடாக இருக்க பெரும்பகுதி வாய்ப்பாக உள்ளது. இதனை சரியாக உணர அக்குபங்சர் நாடியரிதல் முறையோ அல்லது கேட்டறிதல் முறையோ உதவியாக இருக்கிறது. [கீழ் உள்ள வீட்டுகொரு மருத்துவர் புத்தகத்தில் உள்ள தகவல்களை வைத்து, இந்த கேட்டறிதல் முறையில் உங்களுக்கு நீங்களே சுய சிகிச்சை செய்துகொள்ள முடியும். இந்த புத்தகத்தை இலவச டவுன்லோட் செய்ய இந்த லிங்கில் செல்லவும் : http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html]


மூட்டு வலிக்கு காரணம், மூட்டு தேய்வது இல்லை மாறாக, மூட்டுகளை சுற்றி உள்ள தசைநார்கள் பலம் இழப்பதும், மூட்டுகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு பகுதியில் நீர் தன்மை குறைவதால் அவை சுருங்கி விரியும் தன்மையை இழந்து இரு எலும்புகளும் உறைவதால் வலி ஏற்படுகிறது. இதற்கு உதவியாக உள்ள உள்ளுறுப்புகளை சரியான சிகிச்சை மூலம் பலப்படுத்துவதால், இன்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருந்த பல நோயாளிகள் அதனை தவிர்த்து, முழு குணம் பெறுவதனை அக்குபங்சர் மருத்துவர்களான நாங்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். இது போன்ற அடிபடையில் தான் அனைத்து வலிகளும் ஏற்படுகின்றன. அதனை புரியாமல் நோய் அறிகுறிகளை மட்டும் தடுப்பதால், உடலினுள்ளே கழிவுகள் மேலும் மேலும் அதிகரிக்கும்போதுதான் உள்ளுறுப்புகள் செயல் இழக்கின்றன. இப்போதுதான் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை என்ற ஒன்று தேவை என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது. [ஒருவருடைய இரத்தம் உட்பட உடல் உறுப்புகள் எதுவும் மற்றவருக்கு பொருந்தாது, இது பற்றிய விளக்கத்தை என்னுடைய Facebook Timeline www.facebook.com/rkacu இல் உள்ள கட்டுரைகளை படித்து புரிந்துகொள்ளுங்கள்.]சரி இப்போது அக்குபங்சர் சிகிச்சை செய்யும்போது என்ன நடக்கும்..?   

எங்களிடம் அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் எந்த ஒரு நோயாளியையும் முதலில் நாங்கள் செய்யச் சொல்லும் விஷயம் மருந்துகளை [ரசாயண விஷங்களை] நிறுத்துங்கள் என்றுதான்...! இப்போது உடல் சக்தி பெறப்பெற தனக்குள் தேங்கப்பட்ட கழிவுகளை வெளியேற்றும், இப்போது மருந்துகளின் கட்டுப்பாட்டில் இருந்த Hypothalamus மீண்டும் புத்துணர்வு பெரும். இந்த நிலையில்தான் நோயாளிகள் மீண்டும் வலி அதிகரிப்பதனை உணர்வார்கள். ஏன் வலி அதிகரிக்க வேண்டும் என்றால், உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் இப்போது தனக்குள் தேக்கப்பட்ட கழிவுகளை வெளித்தள்ள முயற்சி செய்யும்.. இந்த நிலையில் வலி அதிகரிக்கும், பசி குறையும், சிலர் இரவு நேரங்களில் தான் அதிகம் வலிகளை உணர்வார்கள். காரணம் உடல், இயக்கம் இல்லாத இந்த நிலையில் தான் தன்னுடைய முழு சக்தியையும் நோயை எதிர்த்து போராட உபயோகிக்கும். ஒரு சிலருக்கு இடுப்பிலும் வலிகள் அதிகரிக்கும், காரணம் இதுவரை சாப்பிட்ட மருந்துகள் சிறுநீரகத்தை பளுதுபடுத்தி இருக்கும் இதனை உடல் சரி செய்யும் முயற்சிதான் இந்த வலி. இந்த வலிகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இப்போது வலிகள் மட்டும் அல்லாமல், உடலில் இருந்த நோய்கள் என்று நாம் நினைக்கும் பல அறிகுறிகள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பிக்கும். கடைசியில் மிஞ்சுவது முழுமையான ஆரோக்கியம் மட்டுமே. காரணம் உடல் என்றுமே தவறு செய்வது இல்லை...! உயிரின் வேலை, உடலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்றி அந்த உடலை என்றுமே ஆரோக்யமாக வைத்துகொள்வது மட்டுமே கடமையாக நினைக்கிறது.

இன்னொரு உண்மை என்னவென்றால், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகாரம் செய்யப்பட 112 வகையான மருத்துவ முறைகளில் [அக்குபங்சர், ஆங்கில மருத்துவம் உட்பட] ஒன்றுகூட எந்த ஒரு நோயையும் குணப்படுத்த முடியாது. உடல் தன்னை தானே குணப்படுதிக்கொள்ளும், மருத்துவத்தின் வேலை உடலின் இயக்கங்களை முழுமையாக புரிந்துகொண்டு பக்கத்துணை நிற்பதுமட்டுமே. அதனை விட்டுவிட்டு, உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைக்கும் எந்த மருத்துவத்தாலும், எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தவோ அல்லது குணப்படுதவோ எள்ளளவும் சாத்தியக்கூறு இல்லை.

பசி – தாகம் – தூக்கம் – சோர்வு போன்ற உடலின் அடிப்படை தேவைகளை உடல் நம்மிடம் எதிர்பார்க்கும்போது, அதனை முறையாக கவனித்து அந்த தேவைகளை பூர்த்திசெய்து வந்தால், நிச்சயம் அக்குபங்சர் உட்பட எந்த ஒரு மருத்துவமும் மனித உடலுக்கு தேவையே இருக்காது. காரணம் நம் உடலில் உள்ள உயிரின் வேலை, எப்போதும் தான் அந்த உடலில் உள்ளவரை அதில் உள்ள நோய்களை களைந்து அந்த உடலுக்கு நலனை கொடுபதுமட்டுமே....! இதனை கவனிக்க தவறியவர்களுக்கு மட்டுமே மருத்துவம் தேவைப்படுகிறது...

வீட்டுகொரு மருத்துவர் புத்தகத்தின் ஆசிரியர் -ஹீலர்.உமர் பாரூக் அவர்களின் மற்ற புத்தகங்களை இந்த லிங்கில் http://www.rkacu.blogspot.in/p/free-e-books-download.html சென்று இலவச டவுன்லோட் செய்துகொள்ளலாம். மேலும் இந்த புத்தகங்கள் மற்றும் மற்ற பல மருத்துவ நூல்களையும் வாங்க விரும்பினால் http://www.puthuyir.blogspot.in/ என்ற முகவரிக்கு செல்லவும்.

மேலும் உங்களின் சந்தேகங்களுக்கு, என்னுடைய Facebook Timeline www.facebook.com/rkacuல் உள்ள அனைத்து கட்டுரைகளையும் ஒருமுறை படியுங்கள் அங்கு, உங்கள் கேள்விகளுக்கான 99% பதில்கள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். நன்றி தோழர்களே/சகோதரிகளே.

மருந்துகளின்றி மனித இனம் காப்போம்; மருந்துகளிடம் இருந்து மனித உயிர்களை மீட்போம்…

உண்மையில் நோய் என்றால் என்ன...?

- ஹீலர்.R.கார்த்திகேயன்.,M.Acu.

உடலில் கழிவுகள் தேக்கமே நோய், அதனை உடலே வெளியேற்ற எடுக்கும் முயற்சியே நோய் அறிகுறிகள், நோய் ஒன்றே ஒன்றுதான் ஆனால் அது வெளியேறும் முறைகளை பொருத்து அதன் அறிகுறிகள் பல தோன்றும், அந்த அறிகுறிகளை நோய் என்று நினைக்கும் ஆங்கில மருத்துவம் முதலில் மருந்துகளை கொடுத்து அந்த அறிகுறிகளை மறைக்க பார்க்கின்றது. ஆனால் இந்த ஆங்கில மருந்துகள் அனைத்தும் வியாதியை [அறிகுறியை] அப்போதைக்கு மறைத்து மட்டுமே வைக்கும் குணபடுத்த முடியாது.


[இதனால்தான் ஆங்கில மருத்துவம் எந்த ஒரு நோயையும் குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்று கூறுகிறது. - உண்மையில் ஒரு நோயை கட்டுப்படுத்த முடிந்தால் அதனை குணபடுத்தவும் முடியும் அல்லவா...? எனவேதான் இந்த மருத்துவத்தில் வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்கவேண்டி உள்ளது.]

இதனால் உடலில் மேலும் மேலும் கழிவுகள் தேங்கும், இத்துடன் உடல் ஏற்றுக்கொள்ளவே முடியாத ரசாயன மருந்துகளை கொடுப்பதால், உடலில் ஏற்கனவே இருந்த கழிவுகளுடன் இப்போது இந்த புதிய ரசாயன கழிவுகளும் சேர்ந்துகொள்ளும். இப்போதும் உடல் தனக்குள் தேக்கப்பட்ட கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது, ஆனால் இந்த முறை சற்று கடினமாக வெளியேறுகிறது. முன்பை விட சில புதிய அறிகுறிகள் வெளிப்படுகிறது. இதனை உணராமல் இப்போது மருத்துவம் அதற்கு வேறு ஒரு பெயர் வைத்து அதற்கும் அதே ரசாயனங்களை தான் கொடுக்கிறது, [எடுத்துகாட்டாக: ஒவ்வாமை [Allergy], மற்றும் வேறு சில புதிய பெயர்களை கூறி அதற்கும் ஒரு புதிய மருந்தை கொடுக்கிறது.]

இந்த நிலை மேலும் தொடரும்போது கழிவுகளை உடலை விட்டு நீக்க வேண்டிய உறுப்புகளின் [கல்லீரல், சிறுநீரகம்] இயக்கம் குறையும் இதனையும் மருந்துகளை கொடுத்து சரிசெய்ய முயற்சிக்கும் மருத்துவம் தோற்று, அந்த உறுப்பு கெட்டு போய்விட்டது என்று கூறி அந்த உறுப்பையே வெட்டி எறிந்துவிட்டு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை என்னும் பெயரில் மற்றவரின் உறுப்புகளை வெட்டி வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது, ஆனால் இதனையும் தன்னுடையது அல்ல என்று அடையாளம் கண்டுகொண்ட உடல் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் போது அதனையும் நிராகரிக்கும். [மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தொடர்ந்து மருந்து எடுப்பது இந்த நோய் எதிர்ப்பு சக்தியை முடக்கி வைக்கவே என்பதை இங்கு கவனிக்க வேண்டும் – மேலும் : https://www.facebook.com/photo.php?fbid=138366736293734&set=a.109234725873602.10012.100003612254243&type=1]

[இந்த கட்டுரையை எழுதும் போது என்னை பார்க்க வந்த ஒரு நோயாளியை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்: சுமார் 60 வயது மதிக்க அவர், ஒரு நுரையீரல் புற்றுநோயாளி, அவருக்கு ஆங்கில மருத்துவத்தில் கொடுத்த சிகிச்சை, ஸ்கேன் செய்து விட்டு Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியின் ஒரு பகுதியை வெட்டி உள்ளனர். பின்பு இதனை சரிசெய்ய முடியாது என்று கூறி அனுப்பி விட்டனர். ஏன், இந்த நோயை ஆங்கில மருத்துவம் குணபடுத்த முடியாது என்பது அந்த Test செய்யும் முன்பே தெரியாதா..? இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், உண்மையில் புற்றுநோய் என்றால் என்ன என்பதனை உணரவேண்டும் – மேலே கூறியபடி உடலில் தொடர்ந்து கழிவுகள் தேக்கப்படும்போது உடல் அதனை வெளியேற்ற போதுமான சக்தி இல்லாவிட்டால், அந்த கழிவுகள் உள்ளுறுப்புகளை பாதித்துவிடும் என்று அறிந்த உடல் அதனை ஒரு கட்டியாக ஒன்று திரட்டி, அதன் மேலே ஒரு பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கி ஒரு பகுதியில் ஒட்டவைக்கிறது. இந்த நிலையில் அந்த உடலுக்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தால் நிச்சயம் அந்த கட்டியை கரைத்து அந்த கழிவை வெளியேற்றும் தகுதியுடன் இருக்கிறது. ஆனால் இந்த நிலையில் ஆங்கில மருத்துவம் Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியை வெட்டி துளை இடுவது அந்த கழிவுகள் உடல் முழுமைக்கும் பரவ ஏதுவாக இருக்கும். பின்பு எப்படி அதனை குணப்படுத்த முடியும்]

இப்படிதான் உடலின் [உயிரின்] எந்த ஒரு உணர்வையும் புரிந்து கொள்ளாத மருத்துவத்திடம் சிக்கி நோயுடன் போராடும் காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறதே தவிர. ஆரோக்கியம் என்றும் நிலைபடுவது இல்லை. இந்த மருத்துவம் தன் போக்கை மாற்றாத வரை பல உயிர்கள் பலி ஆவதை யாராலும் மறுக்க முடியாது...

# ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும், அந்த நோய்களைக் குணப்படுத்துவோம் என்று சொல்லக்கூடாது என்றும் இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் இந்த லிங்கில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் :http://rkacu.blogspot.in/2012/04/51.html

# செல்கள் எவ்விதம் இயங்குகின்றன? என்ற கேள்விக்கு இன்றைய நவீன விஞ்ஞானம் ஜீன்களை காரணமாகக் கூறுகிறது. ஆனால் மனிதனைக் கட்டுப்படுத்துவதாக நம்பப்படும் ஜீன்கள் மனித சிந்தனைகளால், நம்பிக்கையால் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன? என்பதை அமெரிக்க ஆய்வாளர் டாக்டர்.புரூஸ் லிப்டன் தன் கண்டுபிடிப்புகள் மூலம் நிரூபித்து வருகிறார். இந்த உரைகளை தெளிவாக புரிந்துகொள்வதன் மூலம் உண்மையான உடல் இயக்கத்தை எளிதாக புரிந்துகொள்ள முடியும். http://www.youtube.com/watch?v=hLZ7GqWpEqM&feature=results_main&playnext=1&list=PL5684DF6B2E4CFE16

# என்னுடைய இந்த தளத்தில் மேலும் பல வீடியோகள் உள்ளன பார்த்து பயனடையுங்கள் http://rkacu.webs.com/knowthetruth.htm

இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை..!

இந்த கட்டுரையை தொகுக்க உதவிய சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்களுக்கு நன்றி.நண்பர் செய்யது இப்ராஹீம் எழுதிய "இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!" என்ற கட்டுரையைப் படித்தேன்.

இந்த விரிவான விளங்களை அதற்கான விமர்சன கட்டுரை வடிவில் வடிக்கிறேன்...

இது உண்மையில் நல்லதொரு உணர்ச்சியைத் தூண்டும் விழிப்பறிவுணர்வு கட்டுரைதான். விழிப்பறிவுணர்வு கட்டுரைகள் எல்லாம் சரியான விழிப்பறிவுணர்வை ஊட்டுவதாக இருக்க வேண்டுமே தவிர, உணர்ச்சியைத் தூண்டும் விதமாக இருக்க கூடாது. ஆனால், இக்கட்டுரை முழுக்க முழுக்க உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

மனித குலத்திற்கு மட்டுமே உணர்ச்சி வசப்படும் நிலை உள்ளது. இப்படி உணர்ச்சி வசப்படும் போதுதான், அதில் உள்ள தீமைகளை அல்லது தில்லுமுல்லுகளை ஆராயாமல் மனித குலம் தவறு செய்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதை எனது கடமையாக கருதுகிறேன்.

இரத்ததானம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது என்றால், மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் எவரும் அவ்வளவாக இரத்ததானம் செய்வதில்லையே ஏன்?

சாதாரண மக்கள் இரத்ததானம் செய்தார்கள் என்று மருத்துவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்குவது போல, தாங்களும் இரத்ததானம் செய்ததாக செய்யாமலேயே எத்தனை பாராட்டுப் பத்திரங்களை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால், எந்த மருத்துவராவது தானும் ஒரு சாதாரண மனிதருக்கு இரத்ததானம் செய்தேன் என்பதற்கு அச்சாதாரண மனிதரின் சான்று ஒன்றையாவது காட்ட முடியுமா?

பெட்ரோலில் இயங்கும் மோட்டார் வாகன இயந்திரத்தின் அதிமுக்கிய பாகங்களை பெட்ரோல் கொண்டுதான் கழுவ முடியும் என்பது போல தொண்ணூறு சதவிகித தான இரத்தம் விபத்தில் சிக்குபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது வெளி உபயோகத்திற்காகத்தான் தேவைப்படுகிறது.

மனிதர்கள் எல்லோருமே விபத்தில் சிக்குவதில்லை. அப்படி ஆங்காங்கே சிக்குபவர்களைக் காக்க, ஆங்காங்கே மருத்துவதுறையில் பணிபுரியும் ஊழியர்களின் இரத்ததானமே போதுமானதே! இதனைச் செய்யாமல் ஏன் மக்களிடம் இரத்ததானம் செய்ய முன்வாருங்கள் என்று கெஞ்சி கூத்தாடுகிறார்கள்? இதற்கு செய்யது இப்ராஹீம் போன்றோர்கள் எதற்காக துணை நிற்கிறார்கள்?

கோடி கோடியாக செலவு செய்தாலும் உற்பத்தி செய்ய முடியாத இரத்தத்தைச் சாதாரண மனிதர்கள் தானாக மனம் இரங்கி மற்ற மனித உயிரைக் காக்க வேண்டும் என்ற நன்னோக்கில் தானமாக தரும் போது, உயிரைக் காப்பதையே பிரதான நோக்கமாக கொண்ட மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தானமாக கொடுக்கப்பட்ட இரத்தத்தைப் பரிசோதனை செய்தோம் என்று லட்சம் லட்சமான சிகிச்சைக் கட்டணத்திற்கு உள்ளேயே அல்பத்தனமான ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கட்டணமாக நோயாளிகளிடம் வசூலிப்பது ஏன்?

சிலர் தங்களின் சுப தினங்களில் ரத்ததானம் செய்வதைக் கடமையாக கொண்டுள்ளனர். அத்தோடு செய்யது இப்ராஹீம் போன்ற தன்னார்வலர்கள் அவ்வப்போது ஆங்காங்கே முகாம் நடத்தி இரத்தம் சேகரிகத்தும் கொடுக்கிறார்கள். ஆனால், ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்றால், ஒன்றுக்கு இரண்டாக அல்லது மூன்று யூனிட்டாக அவரின் உற்றார், உறவினர், நண்பர்கள் என கட்டாயமாக இரத்ததானம் செய்த பிறகுதான், இரத்த வங்கிகளுடைய மருத்துவமனைகள் பரிசோதனைகள் முடிந்து நிலுவையாக உள்ள தங்களின் கையிருப்பு இரத்தத்தையே எடுத்து உபயோகப்படுத்துகிறார்கள்.

ஒருவேளை இரத்த கொடையாளிகளே விபத்தில் சிக்க நேரிட்டாலும் இதே நிலைதான். இரத்த கொடையாளரிடமே இரத்தகொடையளிக்க எவரையாவது அழைத்து வரும்படி கட்டாயப்படுத்துவது கொடுமையிலும் கொடுமையல்லவா?

அப்படியானால், "யாருக்காவது பயன்படும் என்ற நல்ல நோக்கில் கொடையாளிகள் கொடுத்த இரத்தம் எங்கே போகிறது?"

இரத்த சேமிப்பு வங்கிகள் இது குறித்த கணக்குகளை மக்களின் பார்வைக்கு அல்லது தானக் கொடையாளர்களின் பார்வைக்கு கொண்டு சென்றது உண்டா?

இரத்ததான முகாம்கள் மூலம் உங்களிடம் இருந்து பெறப்பட்ட இரத்தம் இன்னாரின் பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை கொடையாளருக்கும், இன்னாருடைய இரத்தம்தான் உங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது என்ற தகவலை பயனடைந்தவருக்கும் தெரிவிக்க வேண்டியது மருத்துவத்துறையின் கடமையல்லவா? இவைகளை சம்பந்தப்பட்ட இருவரும் தெரிந்து கொள்வது எந்த வகையில் நியாயமற்றது?

ஆனாலும், மருத்துவத்துறை இதுவரை செய்தது இல்லை. இனியும் செய்யப்போவது இல்லை. ஏன் தெரியுமா?நிச்சயமாக இதில் ஏதோ தில்லுமுல்லுகள் நடைபெறுகிறது. ஆனால், இப்படியொரு சந்தேகம் இரத்த தானம் செய்யும் எவருக்குமே தோன்றாதது ஏன்? ஒருவேளை, எங்காவது அபூர்வமாக தில்லுமுல்லுகள் நடக்கும்; அதற்கு ஏன் நாம் அலட்டிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் அதுவும் நிச்சயமாக தவறு. ஏனெனில், இரத்த தானம் பெறும் எல்லா நிலையங்களிலுமே இத்தகைய தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்பதே என் குற்றச்சாற்று!

நாம் தானமாக கொடுக்கும் சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே நம் உடல் தானாகவே சுரந்து கொள்ளும் என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அதெப்படி சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே, ஊட்டச்சத்து இல்லாமல் தானாகவே ஊற கிடைக்கும்?

ஏழை எளிய மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை, கோடி கோடியாக கொள்ளையடிக்கும் மருத்துவர்கள் உண்ணும் உணவைவிட சராசரி மனிதர்களாகிய நாம் தரமானதொரு உணவை உண்ணுவிடப் போவதில்லை. உண்மை இப்படியிருக்க, மருத்துவர்கள் இரத்ததானம் செய்யாததன் மூலம் அவர்களின் உடல் நலத்தில் அக்கறை இல்லாமலும், மக்களின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையோடும் இருக்கிறார்கள் என சொல்ல முடியுமா?

இரத்ததானத்தால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது என்பதும் முதல் நோக்கிலேயே ஏற்கத்தக்கது அல்ல. அதாவது, ஒரு லிட்டர் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் பால் முழுவதும் விஷம்தானே!? இல்லையில்லை, பாலோடு சேர்ந்த விஷம் ஊட்டச்சத்து மிக்க பாலாகி விட்டது என சொல்ல முடியுமா?

இதேபோல, புதிதாக உற்பத்தியாகும் சுமார் அரை லிட்டர் புது இரத்தம் ஏற்கனவே உடலில் அசுத்தமாக உள்ள ஐந்தரை லிட்டர் இரத்தத்தோடு சேர்ந்து அவைகளையும் புது இரத்தமாக்கி விடுகிறது என்பது எவ்வளவு புத்திசாலித்தனமான கட்டுக்கதை.

அது சரி, புது இரத்தம் சுரந்துதான் புத்துணர்ச்சி தருகிறது என்றால், இரத்ததானம் செய்பவர்கள் எல்லாம் புத்துணர்ச்சி இல்லாதவர்களா? அவர்களின் இரத்தம் அசுத்தமானதா? அசுத்தமான இரத்தத்தை எதற்கு தானமாக எடுத்து ஆபத்தில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும்? எப்படி காப்பாற்ற முடியும்?

இதனால், நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதும் சரியல்ல. 400 மில்லி இரத்த இழப்பால் நமக்கு பாதிப்பு இல்லை என்பது உண்மையானால், விபத்தில் சிக்குபவர்கள் அதே அளவிற்கு இரத்தம் சிந்தும்போது ஏன் சுய நினைவை இழந்து மயக்கமடைகிறார்கள்?

நாம் கொடுக்கும் 400 மில்லி இரத்தத்தால் நம் உடலுக்குப் பாதிப்பு இல்லை என்பது உண்மையானால், விபத்தில் சிக்குபவர்கள் அல்லாதோருக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்காக தேவைப்படும் இரத்தத்தை அந்நோயாளியிடமே எடுத்துக் கொள்ளலாமே!

எனவே, 400 மில்லி இரத்தம் நம் உடலிலிருந்து இழப்பது நிச்சயமாக நம் உடலுக்குக் கெடுதியானதே. எப்படி?

இரத்தம் கொடுக்கும் ஒரு சிலருக்கு உடனடியாக மயக்கம் வரும் என்பதை மருத்துவத்துறையே வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறது. ஆனால், மயக்கம் உடலுக்கு மிகவும் நல்லது என்று எந்த மருத்துவமும் சொல்வதில்லையே!

உண்மை இப்படி வெட்ட வெளிச்சமாக இருக்கும்போது, மயக்கமடைந்தவரிடம் இருந்து பெறப்பட்ட தான இரத்தத்தை அவருக்கே திரும்ப செலுத்தி விடுவதுதானே தானத்தின் நியாயம். ஆனால், அப்படி ஒருபோதும் செய்வதில்லையே!

மயக்கம் ஏற்பட்டால் உடனே காலைத்தூக்கி பிடிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இரத்ததானம் செய்யும் இடத்தில் மயக்கம் வந்தால் காலைத்தூக்கிப்பிடித்து தற்காலிகமாக காப்பாற்றி விடுவார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இதற்காகத்தான் சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அங்கேயே 200 மில்லி குளிர்ச்சியான செயற்கை பானம் மற்றும் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டை உண்ண வைத்து படுக்க வைத்திருக்கிறார்கள்.

ஒருவேளை இவ்வெற்று சம்பிரதாய சடங்குக்கு முடிந்து அவ்விடத்தை விட்டு சென்ற பின் ஒருவர் மயக்கம் போட்டால், அவர் இரத்ததானம் கொடுத்ததால்தான் மயக்கம் போட்டார் என்பதையும், அவரைக்காப்பாற்ற காலைத் தூக்கி பிடிக்க வேண்டும் என்பதும் யாருக்கு தெரியும். இல்லை அவரேதான் முன்னெச்சரிக்கையாகவோ சொல்லி வைக்க முடியுமா அல்லது மயக்கத்தின் ஊடே எழுந்து சொல்ல முடியுமா?

தானம் செய்தவரை டாஸ்மார்க் தண்ணியடித்து விட்டுதான் விழுந்து கிடக்கிறான் பார் என்றல்லவா போவோர் வருவோர் நினைப்பார்கள். திட்டி தீர்ப்பார்கள்.

கை, கால்களுக்கு இரத்த ஓட்டம் கிடைக்கவில்லை என்றால் மரத்துப்போய் குத்தும், குடையும் என்பதை நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்நாளில் பல முறை அனுபவபூர்வமாகவே உணர்ந்து இருக்கிறோம் அல்லவா? இரத்த ஓட்டத்தை சரி செய்து மரத்துப் போனதை திரும்பவும் சாதாரண நிலைக்கு கொண்டுவர அத்தருணத்தில் வலியால் என்ன பாடுபடுகிறோம். அம்முயற்சி துவங்கிய பின்னர் குறைந்தது ஐந்து நிமிடங்கள் வரை ஆகிறதுதானே!?

கை, கால் மரப்புக்கே இப்படிப்பட்ட விளைவு என்றால், மூளைக்கு இரத்த ஓட்டம் தடைப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஏன் மருத்துவர்களின் மூளையைப் போல் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயல்பட நமது மூளை மட்டும் ஏன் மறுக்கிறது?

இரத்ததானம் செய்தவர் மயக்கம் போட்டு விழுந்து கிடப்பதை, தண்ணியடித்து விட்டுதான் விழுந்து கிடக்கிறார். போதை தெளிந்ததும் எழுந்து விடுவார் என்ற தெளிந்த சிந்தனையில் மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றால், புண்ணியம் தேடி இரத்ததானம் கொடுத்தவர் புகலிடம் தேடி சாவை சந்திக்க வேண்டியிருக்கும். அல்ல அல்ல. இப்படி நிச்சயமாக நடந்திருக்கும். சாலையில் சென்றவர் சுருண்டு விழுந்து செத்தார் என்ற செய்தியை படித்திருக்கிறோம் அல்லவா? அச்சாவுகள் இந்தவகையைச் சார்ந்தது அல்ல என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? இப்படி சாவை சந்தித்தவர்களின் புள்ளி விபரங்கள் யாருக்கு தெரியும்!

இதுபோன்றதொரு நிலமையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரத்ததானம் கொடுப்பவர் தக்க பாதுகாவலர்களோடு வர வேண்டும் என மருத்துவத்துறை இன்று வரையிலும் கூட அறிவுறுத்தியது இல்லை. இப்படி அறிவுறுத்தினால் யார் இரத்ததானம் செய்ய முன்வருவார்கள்? என்ற அடிப்படை காரணம் இதில் இல்லாமலும் இல்லை.

இரத்ததானம் செய்தவரின் உடல் நிலையைப் பொறுத்து சோர்வு ஏற்படும். இது எப்படிப்பட்ட பலம் கொண்டவராக இருந்தாலும் நிச்சயம் என்பதை நானே உணர்வுப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். ஆனாலும், உடனே மயக்கம் அடையாத இரத்ததான கொடையாளர்கள் தங்களின் சோர்வுக்கும், உடல் ஒத்துழையாமைக்கும் தானம்தான் காரணம் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியாது.

நம்மால் தானம் கொடுக்கப்பட்ட 400 மில்லி இரத்தம் மீண்டும் புதிதாக சாதாரணமாக உண்ணும் உணவில் உற்பத்தியாகாது. அதற்காக இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பல மாதங்கள் தொடர்ந்து உண்ண வேண்டியிருக்கிறது. கட்டாய ஓய்வும் எடுக்க வேண்டியிருக்கிறது. இதற்கு மாற்றாக விரைவில் உடல் நலம் தேற சத்து மாத்திரைகளை சாப்பிட வேண்டியிருக்கிறது. இதனாலும் மருத்துவத்துறைக்கே லாபம்.

ஆனால், இதனையெல்லாம் புண்ணியம்தேடி சர்வ சாதாரணமாக இரத்ததானம் செய்பவர்கள் கணித்து விட முடியாது. உடல் தங்களது பணிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், ஓய்வு கொடுத்து விடுவார்களே ஒழிய, இரத்ததானம்தான் காரணமாக இருக்குமோ என அறியக்கூட முற்படுவதில்லை.

மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு இச்சாதக பாதக விளைவுகளை கணிக்கும் திறன் இருப்பதாலும், உடலுக்கு தேவையில்லாத செலவுடன் கட்டாய ஓய்வளித்து வருமானத்தை இழக்க விரும்பாததாலுமே இரத்ததானம் செய்வதில்லை.மேலும், தானமாக பெறப்படும் இரத்தத்தில் நாம் புரிந்து கொள்ள முடியாத வகையில் ஊழலும் நடக்கிறது. ஆனால், அப்படி என்ன நடக்கிறது என்பது எனது அறிவுக்கு இன்னும் விளங்கவில்லை. விளங்கியதும் விளக்குகிறேன்.

கடந்த 2007 ஆம் ஆண்டில் சகோதரி ஒருத்தி (கிறித்துவ நண்பனின் மனைவி) விபத்தில் சிக்கி நான் இரத்ததானம் செய்த வகையில் இதில் குறிப்பிட்டுள்ளபடியான தில்லுமுல்லுகளை உணர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனை இயக்குனருக்கு சட்டப்படியான அறிவிப்பை அனுப்பினேன்.

அதற்கு அம்மருத்துவ அறிவாளிகள் கேட்ட கேள்விகள் எதற்கும் நியாயமான பதிலை சொல்ல முடியாமல், மடத்தனமாக இரத்தம் மரத்தில் காய்க்காது என்பன போன்ற உணர்ச்சியூட்டும் வசனங்களையே திரும்பத்திரும்ப பதிலாக தந்தனர். அவளின் தொடர் சிகிச்சையை காரணம் காட்டி, அவளே என்னிடம் மன்றாடியதால் வழக்கு தொடுக்க இயலாமல் போய் விட்டது. இதுபோன்ற தொடர் சிகிச்சை காரணங்கள்தான் இதில் நடக்கும் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர தடையாய் இருக்கிறது.

மொத்தத்தில், இரத்ததானம் உடலுக்கு நல்லது என்றால், முதலில் அதை மருத்துவர்களுக்கு கட்டாயமாக்க வேண்டும். உனக்கேன் அவர்கள் மீது அவ்வளவு அக்கறை என்று சந்தேக கண்ணோட்டத்தோடோ அல்லது வேண்டா வெறுப்பாகவோ பார்க்காதீர்கள்.

ஏனெனில், அவர்கள் உடல் நலத்தோடு இருந்தால்தானே நாமும் உடல் நலத்தோடு இருக்க முடியும்! அதுவரை, மருத்துவர்கள் உண்டு கொழுப்பதற்கு உணர்ச்சி வயப்பட்டோ அல்லது புண்ணியம் தேடியோ தேவையில்லாமல் இரத்ததானம் செய்வதை தவிர்ப்போம்.

மாறாக, வி(ஆ)பத்தில் சிக்கும் உற்றார், உறவினர், நண்பர்களின் தேவைக்கு ஏற்ப இரத்ததானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்வதோடு, தானத்திற்கு பின் நமது உடல் நலனில் தகுந்த அக்கரை கொள்வோம். நமக்காக அடுத்தவர் தானம் செய்வதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்போம். மருந்தில்லா மகிழ்ச்சி வாழ்வு வாழ்வோம்.

இதுபற்றியெல்லாம் நண்பர் செய்யது இப்ராஹீம் உட்பட உங்களில் எவராவது ஆய்வு செய்தது உண்டா? முடிந்தால் இதற்கான பதிலை இக்கட்டுரைகளின் ஊடே பதிவு செய்து, மீள்பதிவு செய்யலாமே!

Original Post : http://www.inneram.com/articles/health-articles/avoid-blood-donation-2027.html

இந்த கட்டுரையை படித்தபின்பு நான் கூற விரும்புவது : நண்பர் வாரண்ட் பாலா சொல்லுவது சரியே, ஆம் நண்பர்களே இரத்ததானம் செய்வது என்பதில் எந்த அறிவுபூர்வமான விசயமும் இல்லை, ஏன் என்றால் எந்த உடலும் மற்றவர் உடலில் உள்ள இரத்தத்தை ஏற்காது என்பதே உண்மை. 

[அப்படி என்றால் மற்றவர் உடல் உறுப்புகளை எப்படி ஏற்கும்..? அதுவும் நிச்சயம் மருத்துவத்தின் கையாலாகாத்தனமே அன்றி வேறொன்றும் இல்லை. ஒரு உறுப்பை சரி செய்ய முடியாவிட்டால் அதனை வெட்டிவிட்டு மாற்று உறுப்பு வைப்பதும் வீண் வேலையே. மேலும் விளக்கம் பெற என் வெப்சைட் http://rkacu.webs.com/knowthetruth.htm இல் உள்ள டாக்டர்.புரூஸ் லிப்டன் அவர்களின் "உணர்வுகளின் உயிரியல் - Biology of Perception" உரைகள் மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.] 

இரத்ததானம் செய்வது என்பதில் ஆங்கில மருத்துவத்தின் அறியாமையே வெளிப்படுகிறது. அதற்கு உதாரணம், உடல் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஒரே இரத்த குரூப் உள்ள ஒருவரின் இரத்தத்தை மற்றவர் உடலில் ஏன் மருந்துகள் கலந்து ஏற்ற வேண்டும். "நாம் தானமாக கொடுக்கும் சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே நம் உடல் தானாகவே சுரந்து கொள்ளும்" என்று கூறப்படுவது உண்மையானால் தேவை அதிகம் உள்ள உடலில் ஏன் அந்த இரத்தம் தானாகவே சுரக்காது. இரத்தம் பெற்றுகொண்டவர்களுக்கு ஏன் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இன்னும் இதில் மறைக்கப்படும் உண்மைகள் எத்தனை.. எத்தனை ...?

மேலும், மருத்துவர்.அ.உமர் பாரூக் அவர்கள் 2012-04-11 08:33 அன்று இந்நேரம்.காம் இல் என் கருத்துக்கு அளித்த பதில், இதனை இங்கு வெளியிடுவது நன்றாக இருக்கும் என்று கருதினேன்.

மிக முக்கியமான கட்டுரை நண்பரே! மருத்துவ உலகம் சில விஷயங்களை எதிர் கேள்விகளற்றுச் செய்து கொண்டிருக்கிறது. பொது மக்கள்தான் அதற்கு பலியாகிறார்கள். இப்படியான மாற்றுச் சிந்தனைகள் மூலம் தான் உண்மைகளைக் கண்டறிய முடியும்.

நான் ஒரு இரத்தவியல் துறையின் முன்னாள் விரிவுரையாளன். சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...

( தற்போது அக்குபங்சர் மருத்துவராக இருக்கும் ஹீலர்.அ.உமர் பாரூக் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பவியலில் பட்டயம் பெற்றவர். சார்பு மருத்துவக் கல்வி நிறுவனத்தில் ரத்தவியல் துறையில் பணியாற்றியவர். ) # மனித ரத்த செல்களின் ஆயுள் 180 நாள் முதல் 220 நாட்கள்தான். அப்புறம் புதிய செல்கள் தானாகப் பிறக்கும். அப்படி தினமும் பிறக்கிற புதிய செல்கள் தான் தோன்றுகிற உடலுக்கு ஏற்ப உருவாகிறது. உதாரணமாக சளி தொந்தரவுள்ள ஒரு நபருக்கு உருவாகிற ரத்த செல்கள் அந்த சளியை வெளியேற்றும் எதிர்ப்புசக்தியோடு (இம்யுனோகுளோபின்) பிறக்கும். இந்த ரத்தத்தை இன்னொரு நபருக்கு ஏற்றினால் அவர் உடலில் உள்ள ரத்தத்தோடு பொருந்தாது. சில நாட்களில் அந்த ரத்தம் வெவ்வேறு வழிகளில் கழிவுகளாக வெளியேறிவிடும்.

# மனித உடலில் அந்நிய பொருட்களை செலுத்த முடியாது. உடலின் எதிர்ப்பு சக்தி அதை எதிர்த்து ஒவ்வாமையை ஏற்படுத்தும். அப்படி பிறரின் ரத்தத்தை ஒருவர் உடலில் செலுத்தும் போது ஏற்படும் ஒவ்வாமையைத் தடுக்க ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மனிதனுக்கு சக்தியைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிற ரத்ததை ஏற்றுகிற போது எதற்கு ஒவ்வாமை ஏற்படுகிறது?

# ரத்ததானம் பெறப்படும் இடத்தில் ஒரு தகவல் வைக்கப்பட்டிருக்கும். சுமார் 2 யூனிட் ரத்தம் தானம் செய்பவருக்கு இரண்டொரு நாட்களில் ஊறிவிடும் என்று. இயல்பான மனிதருக்கே இப்படி ஊறிவிடும் என்றால், அடிபட்டு ரத்தம் தேவைப்படும் நபருக்கு இன்னும் அதிகமாகத்தானே ஊறும்? உடல் அவசரத்தேவைகளின் போது அதிகமாக வேலை செய்யும்.

...இப்படி ரத்தம் பற்றிய அடிப்படை உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மேலோட்டமாக ரத்ததானம் மிகப்பெரிய சேவையாக கொண்டுசெல்லப்படுகிறது. ஒரு ரத்தத்தை இன்னொருவருக்கு ஏற்ற வேண்டுமென்றால் சுமார் 2000 ரூபாய்க்கு டெஸ்டுகள் செய்ய வேண்டும். அதுவும் பன்றிக் காய்ச்சல் டெஸ்ட் எல்லாம் செய்தால் ரூ.3000 கூடுதல் செல்வாகும். இவ்வளவு தொகையை செலவு செய்து நாம் தானம் செய்கிற ரத்தத்தை டெஸ்ட் செய்கிறார்கள் என்று நம்புகிறீர்களா? நேரடியாக ரத்த வங்கிகளில் விலைக்கு வாங்கினால் 1 யூனிட்டின் விலை ரூ.800 தான். அப்படி என்றால் இந்த ரத்தம் டெஸ்ட் செய்யப்பட்டிருக்குமா? பொய்யான தகவல்களால் நோயாளியை மேலும் நோயாளியாக்குவதும், உடல்நலமுள்ள நபர்களை நோயாளிகள் பட்டியலில் சேர்ப்பதும் தான் ரத்ததானத்தின் வேலை. - மருத்துவர்.அ.உமர் பாரூக்.

மேலும், ஆங்கில மருத்துவத்துறை சார்ந்தவர்தான் கருத்து சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான், MBBS., MD., DV. Ph.D., அவர்கள் சொல்வதனையும் சற்று படியுங்கள். [Source : http://www.foolproofcure.net/newsbulletin.aspx?qid=71]

Dear Doctor, All praises to the Creator who chosen you for the mankind to guide them in the right path.I heard in one of your lectures that blood donation is not good.why?since it gives life to the person who is about to die.your statement differs?please explain.

BLOOD TRANSFUSION KILLS YOU
BLOOD TRANSFUSION IS DANGEROUS

As a medical doctor I should strongly warn you of the misinformation and deliberate disservice done by the media and the hype created by the governments all over the world, including the WHO that dance to the tune of the drug lords of the west.

If after blood donations the patients have survived it is to be construed that despite the blood transfusion the patient has survived! All Praise be only to God, the Almighty! This means the truth is that the blood transfusion to any patient shall only deteriorate the existing condition to an even worse debility.

To cite you the reference I draw your attention to all the terminally ill patients being treated at the Intensive Care Unit (ICU) die only while under intensive Care treatment with the blood transfusion is still on. If only the blood transfusion is not given they would not even have entered the chamber of Hell(CoH) i.e. ICU.

Another important information to you is that the blood is transfused into the vein which carries the dirty, used up blood, poisonous blood. This blood is directly diverted to the liver detoxification to remove the poisonous toxins from the circulation. The blood will be destroyed in the process resulting in hepatitis A, B, C, D, E, F ..... X,Y,Z ... and all such nonsenses. And then they say such hepatitis cannot be cured. In general terminology and common name to the above diagnoses is Jaundice. Allopathy does not have any knowledge regarding jaundice. And they cannot cure it for it is their medical treatment with their medicines which is the root cause for the liver failure and jaundice.

Further, the blood transfused is nothing but the urine infested blood of another person with all his diseases forces still not have come to the fore as manifested diseases. And hence the recipient of the blood transfusion is open for the mixed disease force confusing the defense force of the body, throwing the immune system of a patient into chaos and tantrums. The combined toxins of the blood of the patient and the blood of the killer donor blood escapes even the liver filter by spoiling the function of the liver and enter kidneys. Here the kidneys' urine filtering mechanism is infused with poison by the toxic materials in the mixed blood causing kidney failure and renal shut down.
Allopathy is a killer system of medicine not even fit for veterinary practice, leave alone practicing this system on humans. Take this to any specialists in Allopathy and ask them to answer to what I had written. They will never answer you for they have no answer.

இரத்த தானம் செய்வது சரி / தவறு என்றிருக்க முதலில் அதனை இரத்ததானம் பெறுபவர் உடல் ஏற்க வேண்டும் நண்பர்களே, இன்று மருத்துவம் என்றால் அது ஆங்கில மருத்துவம் மட்டுமே உள்ளதாக ஒரு பிரம்மை ஏற்படுத்தி உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட மற்ற மருதுவங்களின் கருத்துகள் நிராகரிக்கப்படுவது மிகவும் வேதனைக்கு உரியது. இரத்த தானம் மட்டும் அல்ல உறுப்பு தானமும் இந்த ஆங்கில மருத்துவத்தின் கையால் ஆகாததனம் என்று புரிந்தால் நிச்சயம் நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

இன்று நாம் உள்ள நிலை மெக்காலே கண்ட கனவு, நாம் என்று சுய சிந்தனை பெறுகிறோமோ அன்றுதான் மருத்துவம் ஒற்றை தன்மையுடையது அல்ல பன்முக தன்மை உடையது என்று புரியும். இரத்த தானம் மட்டும் அல்ல இன்று உள்ள பன்றி காய்ச்சல் வரை அனைத்துமே ஏமாற்று வேலை என்பது என்று புரியுமோ.... அன்று தான் மருத்துவம் பற்றிய முழுமை தன்மை வெளிப்படும்.