22/06/2012

உண்மையில் நோய் என்றால் என்ன...?

- ஹீலர்.R.கார்த்திகேயன்.,M.Acu.

உடலில் கழிவுகள் தேக்கமே நோய், அதனை உடலே வெளியேற்ற எடுக்கும் முயற்சியே நோய் அறிகுறிகள், நோய் ஒன்றே ஒன்றுதான் ஆனால் அது வெளியேறும் முறைகளை பொருத்து அதன் அறிகுறிகள் பல தோன்றும், அந்த அறிகுறிகளை நோய் என்று நினைக்கும் ஆங்கில மருத்துவம் முதலில் மருந்துகளை கொடுத்து அந்த அறிகுறிகளை மறைக்க பார்க்கின்றது. ஆனால் இந்த ஆங்கில மருந்துகள் அனைத்தும் வியாதியை [அறிகுறியை] அப்போதைக்கு மறைத்து மட்டுமே வைக்கும் குணபடுத்த முடியாது.


[இதனால்தான் ஆங்கில மருத்துவம் எந்த ஒரு நோயையும் குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்று கூறுகிறது. - உண்மையில் ஒரு நோயை கட்டுப்படுத்த முடிந்தால் அதனை குணபடுத்தவும் முடியும் அல்லவா...? எனவேதான் இந்த மருத்துவத்தில் வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்கவேண்டி உள்ளது.]

இதனால் உடலில் மேலும் மேலும் கழிவுகள் தேங்கும், இத்துடன் உடல் ஏற்றுக்கொள்ளவே முடியாத ரசாயன மருந்துகளை கொடுப்பதால், உடலில் ஏற்கனவே இருந்த கழிவுகளுடன் இப்போது இந்த புதிய ரசாயன கழிவுகளும் சேர்ந்துகொள்ளும். இப்போதும் உடல் தனக்குள் தேக்கப்பட்ட கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது, ஆனால் இந்த முறை சற்று கடினமாக வெளியேறுகிறது. முன்பை விட சில புதிய அறிகுறிகள் வெளிப்படுகிறது. இதனை உணராமல் இப்போது மருத்துவம் அதற்கு வேறு ஒரு பெயர் வைத்து அதற்கும் அதே ரசாயனங்களை தான் கொடுக்கிறது, [எடுத்துகாட்டாக: ஒவ்வாமை [Allergy], மற்றும் வேறு சில புதிய பெயர்களை கூறி அதற்கும் ஒரு புதிய மருந்தை கொடுக்கிறது.]

இந்த நிலை மேலும் தொடரும்போது கழிவுகளை உடலை விட்டு நீக்க வேண்டிய உறுப்புகளின் [கல்லீரல், சிறுநீரகம்] இயக்கம் குறையும் இதனையும் மருந்துகளை கொடுத்து சரிசெய்ய முயற்சிக்கும் மருத்துவம் தோற்று, அந்த உறுப்பு கெட்டு போய்விட்டது என்று கூறி அந்த உறுப்பையே வெட்டி எறிந்துவிட்டு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை என்னும் பெயரில் மற்றவரின் உறுப்புகளை வெட்டி வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது, ஆனால் இதனையும் தன்னுடையது அல்ல என்று அடையாளம் கண்டுகொண்ட உடல் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் போது அதனையும் நிராகரிக்கும். [மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தொடர்ந்து மருந்து எடுப்பது இந்த நோய் எதிர்ப்பு சக்தியை முடக்கி வைக்கவே என்பதை இங்கு கவனிக்க வேண்டும் – மேலும் : https://www.facebook.com/photo.php?fbid=138366736293734&set=a.109234725873602.10012.100003612254243&type=1]

[இந்த கட்டுரையை எழுதும் போது என்னை பார்க்க வந்த ஒரு நோயாளியை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்: சுமார் 60 வயது மதிக்க அவர், ஒரு நுரையீரல் புற்றுநோயாளி, அவருக்கு ஆங்கில மருத்துவத்தில் கொடுத்த சிகிச்சை, ஸ்கேன் செய்து விட்டு Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியின் ஒரு பகுதியை வெட்டி உள்ளனர். பின்பு இதனை சரிசெய்ய முடியாது என்று கூறி அனுப்பி விட்டனர். ஏன், இந்த நோயை ஆங்கில மருத்துவம் குணபடுத்த முடியாது என்பது அந்த Test செய்யும் முன்பே தெரியாதா..? இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், உண்மையில் புற்றுநோய் என்றால் என்ன என்பதனை உணரவேண்டும் – மேலே கூறியபடி உடலில் தொடர்ந்து கழிவுகள் தேக்கப்படும்போது உடல் அதனை வெளியேற்ற போதுமான சக்தி இல்லாவிட்டால், அந்த கழிவுகள் உள்ளுறுப்புகளை பாதித்துவிடும் என்று அறிந்த உடல் அதனை ஒரு கட்டியாக ஒன்று திரட்டி, அதன் மேலே ஒரு பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கி ஒரு பகுதியில் ஒட்டவைக்கிறது. இந்த நிலையில் அந்த உடலுக்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தால் நிச்சயம் அந்த கட்டியை கரைத்து அந்த கழிவை வெளியேற்றும் தகுதியுடன் இருக்கிறது. ஆனால் இந்த நிலையில் ஆங்கில மருத்துவம் Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியை வெட்டி துளை இடுவது அந்த கழிவுகள் உடல் முழுமைக்கும் பரவ ஏதுவாக இருக்கும். பின்பு எப்படி அதனை குணப்படுத்த முடியும்]

இப்படிதான் உடலின் [உயிரின்] எந்த ஒரு உணர்வையும் புரிந்து கொள்ளாத மருத்துவத்திடம் சிக்கி நோயுடன் போராடும் காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறதே தவிர. ஆரோக்கியம் என்றும் நிலைபடுவது இல்லை. இந்த மருத்துவம் தன் போக்கை மாற்றாத வரை பல உயிர்கள் பலி ஆவதை யாராலும் மறுக்க முடியாது...

# ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும், அந்த நோய்களைக் குணப்படுத்துவோம் என்று சொல்லக்கூடாது என்றும் இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் இந்த லிங்கில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் :http://rkacu.blogspot.in/2012/04/51.html

# செல்கள் எவ்விதம் இயங்குகின்றன? என்ற கேள்விக்கு இன்றைய நவீன விஞ்ஞானம் ஜீன்களை காரணமாகக் கூறுகிறது. ஆனால் மனிதனைக் கட்டுப்படுத்துவதாக நம்பப்படும் ஜீன்கள் மனித சிந்தனைகளால், நம்பிக்கையால் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன? என்பதை அமெரிக்க ஆய்வாளர் டாக்டர்.புரூஸ் லிப்டன் தன் கண்டுபிடிப்புகள் மூலம் நிரூபித்து வருகிறார். இந்த உரைகளை தெளிவாக புரிந்துகொள்வதன் மூலம் உண்மையான உடல் இயக்கத்தை எளிதாக புரிந்துகொள்ள முடியும். http://www.youtube.com/watch?v=hLZ7GqWpEqM&feature=results_main&playnext=1&list=PL5684DF6B2E4CFE16

# என்னுடைய இந்த தளத்தில் மேலும் பல வீடியோகள் உள்ளன பார்த்து பயனடையுங்கள் http://rkacu.webs.com/knowthetruth.htm